வியாழ குருவாய்
- வியாழ குருவாய் வந்தாலும் வியாபித்து
- நீ வரவேண்டும் சாயி குருதேவா
- வியாகூலம் நீக்கி அனுகூலமாக்கிடவும்
- நீதான் வரவேண்டும் சாயி குருதேவா
- வியாழக்கிழமை உந்தன் தினம், உனக்குப் பிடித்த தினம்
- வியாழ குருவாயும் நீயே வரவேண்டும் சாயி குருதேவா
- இரு வினைகள் நீக்கிப் பிறவிக்கடல் கடந்திட விடுதலை தந்திட
- முத்தி வரை நீ மட்டும் வரவேண்டும் சாயி குருதேவா
- சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையில் வாழ்வியல்
- வாழ்ந்திட வரமளித்தருள நீதானே, தானே,
- வந்தருள வேண்டும் சாயி குருதேவா
- சத்சங்கங்களிலுன் சாயி இலக்கியங்களறியச்
- சங்கல்பம் தர வேண்டும்
- நித்தியப் பூசனைகலிலுந்தன் நாமாவளிகளில்
- மெய் மறந்துலயிக்க வேண்டும்
- சாஸ்வதமாயுன் சாந்நித்யம் சகல
- உயிர்களிலும் உய்விக்க வேண்டும்
- சத்தியசாயி தெய்வம் என் தெய்வமெனும்
- சத்திய எண்ணத்தில் சங்கமமாக வேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்