கலங்கரை விளக்கம்
- அன்பு மதம் மொழி இனமாய் உருவாக்கிச்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையைச் சனாதன தர்மமாக்கி
- உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பரிசனங்ளை, உணர்விலே
- உட்புகுத்தி,
- கீதைப்பாதை வழிநடக்க வைத்துச் சமூக சேவைப் பணிகளில்
- கிராமசேவையே இராமசேவை, மானிட சேவையே
- மகேசன் சேவையெனப் பண், பதம், படுத்தி
- பஜன்கள், நக சங்கீர்த்தனம், கல்வி சங்கீதம், மருத்துவம்,
- குடிநீர், நாராயண சேவைகளில், ஈடுபடுத்தி மனிதத்தில்
- பக்தி ஆன்மீகத்தை உருவேற்றி யுன்னவதாரப்
- பர்த்திப் பிரசாந்தியை இப்பாரே உற்றுநோக்க வைத்தாய்
- பாரதப் பூமியை உலகுக்கே கலங்கரை விளக்கமாக்கி
- ஆன்மீகக்குரு வாக்கினாய்
- அவரவர் தெய்வமாய்ப் பன்மதப் பக்தருக்கும் காட்சி
- அளித்தருள் புரிந்து கருணையும் செய்தாய்
- உன் பக்த நதிகள் சங்கமிக்கக் கருணா சாகரமாயுன்
- சங்கமத் திருவடிகள் அளித்தாய்
- ஸ்ரீ சத்ய நாத தெய்வமே திங்களில் திருவுருவாய்
- வந்தே திருக்காட்சி தரவேண்டும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்