கலங்கரை விளக்கம்

  • அன்பு மதம் மொழி இனமாய் உருவாக்கிச்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையைச் சனாதன தர்மமாக்கி
  • உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பரிசனங்ளை, உணர்விலே
  • உட்புகுத்தி,
  • கீதைப்பாதை வழிநடக்க வைத்துச் சமூக சேவைப் பணிகளில்
  • கிராமசேவையே இராமசேவை, மானிட சேவையே
  • மகேசன் சேவையெனப் பண், பதம், படுத்தி
  • பஜன்கள், நக சங்கீர்த்தனம், கல்வி சங்கீதம், மருத்துவம்,
  • குடிநீர், நாராயண சேவைகளில், ஈடுபடுத்தி மனிதத்தில்
  • பக்தி ஆன்மீகத்தை உருவேற்றி யுன்னவதாரப்
  • பர்த்திப் பிரசாந்தியை இப்பாரே உற்றுநோக்க வைத்தாய்
  • பாரதப் பூமியை உலகுக்கே கலங்கரை விளக்கமாக்கி
  • ஆன்மீகக்குரு வாக்கினாய்
  • அவரவர் தெய்வமாய்ப் பன்மதப் பக்தருக்கும் காட்சி
  • அளித்தருள் புரிந்து கருணையும் செய்தாய்
  • உன் பக்த நதிகள் சங்கமிக்கக் கருணா சாகரமாயுன்
  • சங்கமத் திருவடிகள் அளித்தாய்
  • ஸ்ரீ சத்ய நாத தெய்வமே திங்களில் திருவுருவாய்
  • வந்தே திருக்காட்சி தரவேண்டும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0