சரணமே சந்ததம்
- உருவாய், அருவாய்க் கருவாய், வந்தே நல்வாழ்வு தந்திடுவாய்
- திருவாய், கற்பகத்தரு வாயென்றும்
- அபயஹஸ்த மளித்திடுவாய்
- மானஸத் துணையாயுடன் வந்து என்றும்
- மகிமை களாற்றிடுவாய்
- மானுஷ்ய ரூபத்திலவதரித்து வந்த எங்கள் ஸ்ரீ சத்திய சாயீசா
- வினைகளைத் தீர்த்து நற்பவியளிப்பதில் ஸ்ரீசாயி கணேசன்
- வந்த வரும் பிணி போக்கி உடல் நலம் காப்பதில்
- ‘ஸ்ரீ சாயிமுருகன்’
- விரைந்தோடி வந்து விருந்தோம்பலளித்தலில் ஸ்ரீசாயி சிவன்
- மந்தகாசப் புன்னகையில் கனவு நனவில் காட்சியளித்திடும்
- ஸ்ரீ சாயி கிருஷ்ணன்
- சத்திய தர்மவாழ்வு வாழ்ந்து காட்டிய ஸ்ரீ சாயிராமன்
- கணக்கற்ற எண்ணிலடங்கா அன்னையர் அன்பில்
- ஸ்ரீ சாயி துர்க்காபரமேஸ்வரி, சாயீஸ்வரி, பர்த்தீஸ்வரி
- சீரடி அவதாரத்தின் சீர்மிகு உதியின் உத்தமம்
- சீரடி பாபா திருஅனுபூதியாய்
- சகல நலம் நல்கும் அருமருந்துன் பரமபவித்ர விபூதியாய்
- ஸ்ரீ சத்ய சாயி
- சஞ்சீவி மூலிகைகள் ஔஷதங்களால் காப்பதில்
- ஸ்ரீசாயி ஆஞ்சநேயர்,
- சிரஞ்சீவியாய் வாழ்வியல் வாழ அருளும் பரஞ்சோதி
- சர்வமத தெய்வமாய்க் காட்சிதரும் பரப்பிரும்மம் நீயே
- போற்றியே வந்தனம், உன் சரணமே சந்ததம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்