பக்த நதிகள்

  • கார்த்திகை தீபச்சுடர் ஒளியில் அருணைமலை யிலழகாயுனது
  • ஸ்ரீ சத்யசாயி சிவமென்ற அருட்கருணை தெரியும்
  • ஸ்ரீராமன் வடிவத்தில் உன்னைத் தொழும்
  • அடியவர்க்குச் சரயுவின் அயோத்தியாய் பிரேமையும்
  • அழகழகாய்த் தெரியும்
  • ஸ்ரீ சாயி கிருஷ்ண ரூபத்தில் உன்னைப் பணியும் பக்தர்க்கு
  • யமுனா நதி தீர வேணுகானம் உன்குழலிசையில் ஒலிக்கும்
  • கங்கைக் கரைதனில் சாயி சிவமே காசி விஸ்வேஸ்வரனாயுன்
  • வியாபகம் புரியும், விந்தையாய் அருளும்
  • சித்திராவதி தீரத்தில் உன் அற்புதங்களும் மகிமைகளும்
  • லீலாவினோதங்களுமுன் அவதாரமகிமைகளை உணரும்
  • ஸ்ரீ சாயி முருகனாய்ச் சரவணப்பொய்கையில்
  • உன் சாந்நித்தியம் மலரும், வளரும்
  • இவ்வுலகில் உள்ள புண்ணிய நதிகள் சங்கமக்கடலிலும்
  • உன் பவித்திரக் கருணையே குளிர வைக்கும்
  • இப்போது மெப்போதுமுன் சங்கமத் திருவடிகளில்
  • சரணாகதியடைய அருள்வாயுன் பக்த நதிகளுக்கே
  • விதி வலியதாயினும் கதி நீயே சரணாகதியாய்
  • மதியுணர்ந்து மனச்சொல் நீக்கி வாழ்வியல் வாழ்ந்திடப்
  • பதியுன் சங்கமத் திருவடிகளில் சமர்ப்பித்துச் சேவைகள்
  • பற்பல செய்துன் மலர்த் திருவடிகளுக்கு
  • அர்ப்பணம் செய்விக்க அருள்வாய் ஈசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0