சரணாகதியே சரணம்

  • செய்வதும் செய்விப்பதும் செயலுமதுவே
  • உன் ஆத்ம தத்துவம் சுவாமி
  • குமரக் கடவுளின் வள்ளியாய்க், கண்ணனின் ராதையாய்,
  • இறைவனில் பாதி இறைவி உமையம்மையாய்,
  • மாலின் மஹாலஹ்மியாய்,
  • பிரம்ம சரஸ்வதிதேவியாய்,
  • நவசக்திகள் அனைத்தும் ஆன ஆதி சக்தியாய்,
  • மங்கலங்கள் தந்திட மகிமைகள் புரிந்திட
  • மானசீகமாய் வரவேண்டும்
  • மானஸா தேவியே சிவசக்தி ஸ்வரூபிணி சாயிதேவியே
  • வெள்ளியில் வேள்வியாய் வந்தே ஆசிகள்
  • நல்குவாய் தாயே
  • உன் செந்தாமரைப் பொற் பாத
  • கமலங்களுக்கு ஆத்ம வந்தனம்
  • வருக, தருக, கருணை பொழிக
  • வெள்ளிமலை மன்னவனின் சத்திய அரசியே சத்தியசாயி
  • ஈஸ்வரியே உன் சங்கமத் திருவடிகளில்
  • தங்க இடம் தரவேண்டும்
  • மங்களம் பொங்க வேண்டும்
  • வாழ்வியல் சிறக்க வேண்டும்
  • உன் சேவைப் பணிகள் ஆற்றிப் பிறவிப்பயன்
  • அடைய வேண்டும்.
  • உன் சரணாகதியே சரணம்
  • ஸ்ரீ சத்யசாயி தேவியே போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0