“முருகு” அழகு

  • முருகு அழகு உன் திருப்புகழோ அழகோ அழகு
  • பிரம்ம விஷ்ணு சிவனுமுன் னுள்ளிலுறையும்
  • உன்னைச் சிந்தித்துத்தொழும் அன்பர்களுக்குச்
  • சந்ததிகள் காப்பாய்
  • சங்கடங்கள் தீர்ப்பாய், ஞான சக்தியாய் ஞாலத்தில்
  • ஞானம் நல்கிட நற்றுணையாக வந்திடுவாய்
  • வேலிருக்க வினையில்லை, மயிலிருக்கப் பயமில்லை
  • உன்னருளிருக்கக் கவலையில்லை
  • மால்மருகா சிவசக்தி குமரா கஜமுக இளையா செந்தூரின்
  • சண்முகா, வேலவா, பிரசாந்திச் சுப்பிரமணியத் தெய்வமே
  • சாயி முருகா, கந்தா, சொந்தா, சகலரையும் காத்தருள அகிலமதில்
  • அழகாய் வருவாயே ஆனந்தம் தருவாயே
  • உன்பொற்பாத மலரடிகள் சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0