பொற்குமுதமே

  • கூடல் மாநகரின் பொற்குமுதமே அபரஞ்சிச் சொக்கத்திருவே
  • பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே
  • சனாதன தர்மத்தின் சத்திய வடிவொளியே
  • ஆன்மீகக்கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம்
  • வளியேயெங்களின் விழியே பக்தி வழியே
  • வடிவே ஆராவமுதனும் ஆடும் தில்லை நடராசனும்
  • பரப்பிரம்ம ஸ்வரூப அண்டமுமான
  • அகிலமே உனை ஆராதித்தலில் தானே சுகமே
  • இகமே பரமே இறையே சத்யமே
  • ஆயிரம் அன்னையர்க்கும்மட்டுமின்றி
  • பாயிரம் பாவலர்க்குமிப்பாரின் அனைத்து
  • இன்னுயிர்கட்குமினிய இதயதெய்வமாம்
  • நீ ஞாயிறாய் நற்றமிழாய் நலமாய்
  • நற்பவியாய், ஞாலத்தில் அஞ்ஞானமகற்றிட
  • ஞான ஒளியாய், ஒளிர்ந்திடப்
  • புதுவிடியலாய் அருள் நல்க வருகவே வருகவே
  • நான்மறைகளின் சாரமாய்ச் சனாதன சாரதியாய்
  • சிவசக்தி ஸ்வரூபமாய்ப் பர்த்தீஸ்வரியாய்
  • அருள்புரிய வரவேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயீசா சரணம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0