பொற்குமுதமே
- கூடல் மாநகரின் பொற்குமுதமே அபரஞ்சிச் சொக்கத்திருவே
- பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே
- சனாதன தர்மத்தின் சத்திய வடிவொளியே
- ஆன்மீகக்கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம்
- வளியேயெங்களின் விழியே பக்தி வழியே
- வடிவே ஆராவமுதனும் ஆடும் தில்லை நடராசனும்
- பரப்பிரம்ம ஸ்வரூப அண்டமுமான
- அகிலமே உனை ஆராதித்தலில் தானே சுகமே
- இகமே பரமே இறையே சத்யமே
- ஆயிரம் அன்னையர்க்கும்மட்டுமின்றி
- பாயிரம் பாவலர்க்குமிப்பாரின் அனைத்து
- இன்னுயிர்கட்குமினிய இதயதெய்வமாம்
- நீ ஞாயிறாய் நற்றமிழாய் நலமாய்
- நற்பவியாய், ஞாலத்தில் அஞ்ஞானமகற்றிட
- ஞான ஒளியாய், ஒளிர்ந்திடப்
- புதுவிடியலாய் அருள் நல்க வருகவே வருகவே
- நான்மறைகளின் சாரமாய்ச் சனாதன சாரதியாய்
- சிவசக்தி ஸ்வரூபமாய்ப் பர்த்தீஸ்வரியாய்
- அருள்புரிய வரவேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயீசா சரணம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்