நீ எங்கள் வரம்
- சத்யசாயி சிவமே நீயெங்கள் அகம் தவமதிலும்
- நீயே ஜெயமுன்னில்தானே யிச்செகம்
- பரப்பிரும்மமே உன்துணையே
- சுகம், சுபம், வரம், சத்யம், தர்மம்,
- சாந்தி, பிரேமை, அஹிம்சையென சர்வமும் சகலமும்,
- சாஸ்வதமும், சனாதானமுமான
- சர்வேஸ்வர பவம், பாவம், பரமம்
- மகிமையும் மாளாத கீர்த்தியுமான விஸ்வேஸ்வர சிவம்
- மனிதமும் மாண்புந் தந்தெமைக் காக்கின்ற
- ஸ்ரீ சத்திய சாயீஸ்வர மயம்
- திங்களாய்ச் சூரியனாய் வரமளித்து வழிவகுத்து
- வடிவமைத்து வாழ்விக்க வந்த
- ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபம் சதம்
- உனைத் துதித்துத்தொழுது நினைத்தாலே
- அகமதிலே சுகமதில் தானுன் லயம்
- நீயுமவ்வன்பிலே வயம் சுவாமி
- உலகெங்கும் உயிரோட்டமாய் உணர்வெல்லாம் சாயித்வம்
- கானல் நீரிலுமுன் கருணையின் வரம்
- சாயி பக்தர்களாய்ச் சேவைகளில் தரம்
- அன்பு இனம் மொழியே உன் காருண்ய மதம்
- உனதருளிருக்க ஏதுவாழ்வியலில் பயம்
- சாயீசா சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்