நீ தருவாய் கொடையே
- சத்திய சாயி சிவமே நீ தவமே அதிலுன் அகமே
- நித்திய தரிசனம் தருமது சுகமே அதில்வரும் சுபமே
- சாகித்தியமாமுன் கருணை மழையே அதில் பிரேமை
- நீ தரும் கொடையே
- சங்கல்பமாய் வருமுன்துணையே, அதில் இலையே ஐயமே
- கயிலை மலையின் கவினே, கவியே
- கலையே கவித்துவமே
- கலியுக அவதாரியே பர்த்திப்பதியின்
- பயனே பரப்பிரும்மப் பதியே!
- நிஜ உணர்வில் உருவில் துயிலில் கனவில்
- நனவில் நீ வருவாயது நிஜமே
- ஆத்மானந்தமடையும் மனதிலுன் ஜபமே நாமஸ்மரணையே
- சகல கடாட்சம் நல்கும்
- சாந்தி தரும் உன் பஜனே சுவாமி பன்மதப் பக்தர்கள்
- கூடுமுன் பர்த்தியம்பதியிலுன்னன்பு
- மதம் ஒன்றே, அதன்விதம் நன்றே
- சாயி குடும்ப இனம் ஒன்றே எனும் தாத்பர்யமதும் உனதே
- ஸ்ரீ சத்தியசாயீச தெய்வமே, நீயே சரணாகதி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்