அமிர்த கலசத்தில்
- பாற்கடலினமிர்த கலசத்தில முதமாய் வந்துதித்த
- அழகு மகாலட்சுமித்தாயே வந்தருள்க
- விஷ்ணுவின் அலர்மேல் மங்கையே அருளாட்சி தருகவே
- அமிழ்தினுமினிய வுனைத்தா னாராதிக்காதார் எவரம்மா
- வாழ்வியலி னாதாரம் நீயம்மா
- சேதாரமின்றியே வாழவைப்பவளும் நீதானே தாயே
- செந்தாமரைச்செல்வியே உன்செங்கமல மலர்ப்பாதம்
- தொழவே பிரசாந்தி நிவாசினியாய் நல்வரவு வருகவே
- இப் பிரபஞ்சம் தழைக்கவே நாடுகள் செழிக்கவே
- சனாதன தர்மம் காக்கவே மனிதம் மலர்ந்திடவே
- உன்பொற்பதம் பதித்தே நற்கருணை நல்கிட
- ஸ்ரீ சத்தியசாயி மகாலக்ஷ்மித்தாயே
- மகாமாயே பர்த்தீஸ்வரி பரமேஸ்வரியே
- சிவசக்தி ஸ்வரூபிணியே வரம்
- தரவே வந்தருள்கவே
- உன்னைத் தரிசிக்கும் இந்நாள் நவராத்திரிதான்,
- நவநாயகியாய் எந்நாளும் எப்போது முன்னருட்
- கருணை பெறும் நன்னாள் நற்பவியே
- நல்லாசி தந்தருள்கவே. சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்