‘விடையேறி’ வருவாய்

  • விடையேறி விடை சொல்ல வருவாய் பாபா
  • விடையும் நீயாகிக் கேள்வியும் தானாகியே
  • தடையேதுன் னன்புகடலினிலே! தயை தவிர,
  • வேறேதுமில்லை யுனதருளினிலே, அன்பினிலே
  • கடைத்தேற்ற விரைந்தோடி வருமுந்தன்
  • ஆத்மார்த்தப் பலனதுவே, பயனதுவே
  • கோடி சென்ம மிருப்பினுமுந்தன் கடைக்கண்
  • பார்வையே போதும் நயன தீட்சையாய்
  • கடைக்கோடியிருப்பினு முன்நயனங்களினருட்
  • திருப்பார்வைதான் வேண்டுது போதும்
  • நடைதனில் நளினமாய் வந்து நற்பவியளித்திடுமுந்தன்
  • அபயஹஸ்த மளித்திடுமே, அவரவரின் வரந்தனையே
  • நடந்தும், கிடந்தும், எந்நிலை வரினுமுன்னைப் பணிந்துன்
  • பதம்தொழுது, பண்பாடி, ஆனந்தித்தால் போதும்
  • ஆதர்ஷனமளித்திடும் ஆத்மலிங்க அனந்த சாயி பரப்பிரம்மமே
  • உன் பரமானந்தப் பரமபதம் நிதம்
  • வரமாய் வேண்டுமுன் பங்கயத்தாமரை
  • மலரடிகளுக்கு வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0