ஸ்ரீ சாரதாம்பிகையாய்

  • நாவுக்கரசியுன் நல்வீணை மீட்ட மேதினியில் கல்வி சிறக்கும்
  • வாக்வாதினியுன் ஏட்டுச்சுவடியில் கவித்துவம் வியாபிக்கும்
  • கூத்தனூரில் கொலுவிருப்பவளே சரஸ்வதித்தாயே
  • கல்வி கேள்விகளில் புலமைதந்து நம் பாரத நாட்டிற்குப்
  • பெருமை சேர்த்திட நல்வரமருள வேண்டும்
  • குமரகுருபரருக் கருளியவளே சகலகலாவல்லியே
  • சரஸ்வதி அந்தாதியின் அன்னம் வாகினி கலைவாணியே
  • வித்யாவாசினி மேதாவிலாசினி கலையரசிகவிதாயினியே
  • சிருங்கேரி பீட சாரதாம்பிகையே
  • வெண்பட்டு உடுத்தி வெண்தாமரையில்
  • வீற்றிருந் தருள்பவளே
  • அஷ்ட சரஸ்வதிகளாக வந்து அகரத்திலிருந்
  • தருள்பாலிக்க வேண்டும்
  • சப்தமாதாக்களாய் வந்தே சப்த ஸ்வரங்களில்
  • ஒலிக்க வேண்டும்
  • நவசரஸ்வதிகளாய் வந்து நலம் நல்கியுந்தன்
  • கருணை அன்பு தரவேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0