ஸ்ரீ சாரதாம்பிகையாய்
- நாவுக்கரசியுன் நல்வீணை மீட்ட மேதினியில் கல்வி சிறக்கும்
- வாக்வாதினியுன் ஏட்டுச்சுவடியில் கவித்துவம் வியாபிக்கும்
- கூத்தனூரில் கொலுவிருப்பவளே சரஸ்வதித்தாயே
- கல்வி கேள்விகளில் புலமைதந்து நம் பாரத நாட்டிற்குப்
- பெருமை சேர்த்திட நல்வரமருள வேண்டும்
- குமரகுருபரருக் கருளியவளே சகலகலாவல்லியே
- சரஸ்வதி அந்தாதியின் அன்னம் வாகினி கலைவாணியே
- வித்யாவாசினி மேதாவிலாசினி கலையரசிகவிதாயினியே
- சிருங்கேரி பீட சாரதாம்பிகையே
- வெண்பட்டு உடுத்தி வெண்தாமரையில்
- வீற்றிருந் தருள்பவளே
- அஷ்ட சரஸ்வதிகளாக வந்து அகரத்திலிருந்
- தருள்பாலிக்க வேண்டும்
- சப்தமாதாக்களாய் வந்தே சப்த ஸ்வரங்களில்
- ஒலிக்க வேண்டும்
- நவசரஸ்வதிகளாய் வந்து நலம் நல்கியுந்தன்
- கருணை அன்பு தரவேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: