தாய் தந்தையாய்

  • ஸ்ரீ சத்தியசாயி கோவிந்தா நீ எங்கள்
  • நித்திய தாய் தந்தையுமாய் என்றுமே சாயி கோவிந்தா
  • மகாபலி சக்கரவர்த்திக்கு வானமளந்தாய் ஓரடியில்,
  • பூமியளந்தாய் ஈரடியில்
  • சீரடியில் உன் ஈரடி எடுத்து வைத்தாய் சீர்மிகு சிறப்பு தந்தாய்
  • பார்போற்ற பர்த்தியைப் பாங்காய் வடிவமைத்தாய்
  • பன்மதப் பக்தருக்கும் அன்பில் அரவணைத்து
  • மதம், இனம், மொழியால் அன்பு மதம்
  • உருவாக்கிக் கருணை செய்தாய்,
  • காருண்யமளித்தாய்
  • அகிலம் அனைத்தும் சத்சங்கம் வளர வைத்தாய்
  • சேவைகள் புரிய வைத்தாய்
  • கிராம சேவை, ராம சேவை, மானுஷ சேவையே,
  • என மனிதம் மலர வைத்தாய்
  • அன்பு அன்பு அன்பு மட்டுமே என
  • இதயத்தில் விதைத்து விட்டாய்
  • ஆழ் மனதில் புதைத்து விட்டோம்
  • ஸ்ரீ சத்திய சாயி கோவிந்தா உன் சங்கமத் திருவடிகளுக்கு
  • அனந்த ஆனந்த கோடி வந்தனங்கள் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0