ஒவ்வொரு நிமிடமும்
- சுவாமியுன் சங்கல்பம் ஒவ்வொரு நிமிடமும்
- நிறைந்து வருகிறது, அதை உணர முடிகிறது
- என்றும் உரைக்கவும் முடிகிறது
- கவிதைகளில் வடிக்கவும் வைக்கிறாய் ஒவ்வொருவருள்ளும்
- நீ உறைந்து நிறைந்து நிற்பது நிறைவாய்
- ஆத்மாவில் ஊடுருவுகிறது
- கேட்காமலே நினைத்ததை நடத்தித் தருகிறாய்
- கேட்டும் வேண்டாதவை கிடத்தி, கடத்தி வைக்கிறாய்
- ஒவ்வொரு மூச்சிலும் நீ இருக்கிறாய்
- பேச்சிலும் நீதான் உரைக்கிறாய், மூச்சிலும் நீயே உறைகிறாய்
- கல்லுக்குள்ளும் தேரையைக் காக்கிறாய்
- கருவிலும் திருஉந்தன் கருணையைத்தான் தருகிறாய்
- மேகங்களில் உன் அன்பு மழை தனையுலகுக்கு வர்ஷிக்கிறாய்
- மலர்களில் வாசமாய், வீணையில் நாதமாய்
- இசையில் ஸ்வரமாய் வாழும் பரப்பிரம்மமே
- உன் பாதாரவிந்தங்களில் சரணாகதி சுவாமி
- ஸ்ரீ சத்ய சாயீசா சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: