ஒவ்வொரு நிமிடமும்

  • சுவாமியுன் சங்கல்பம் ஒவ்வொரு நிமிடமும்
  • நிறைந்து வருகிறது, அதை உணர முடிகிறது
  • என்றும் உரைக்கவும் முடிகிறது
  • கவிதைகளில் வடிக்கவும் வைக்கிறாய் ஒவ்வொருவருள்ளும்
  • நீ உறைந்து நிறைந்து நிற்பது நிறைவாய்
  • ஆத்மாவில் ஊடுருவுகிறது
  • கேட்காமலே நினைத்ததை நடத்தித் தருகிறாய்
  • கேட்டும் வேண்டாதவை கிடத்தி, கடத்தி வைக்கிறாய்
  • ஒவ்வொரு மூச்சிலும் நீ இருக்கிறாய்
  • பேச்சிலும் நீதான் உரைக்கிறாய், மூச்சிலும் நீயே உறைகிறாய்
  • கல்லுக்குள்ளும் தேரையைக் காக்கிறாய்
  • கருவிலும் திருஉந்தன் கருணையைத்தான் தருகிறாய்
  • மேகங்களில் உன் அன்பு மழை தனையுலகுக்கு வர்ஷிக்கிறாய்
  • மலர்களில் வாசமாய், வீணையில் நாதமாய்
  • இசையில் ஸ்வரமாய் வாழும் பரப்பிரம்மமே
  • உன் பாதாரவிந்தங்களில் சரணாகதி சுவாமி
  • ஸ்ரீ சத்ய சாயீசா சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0