சரணமிதுதான்
- பிரணவ ஸ்வரூப சாயி குகனுக்கு சரவணப்
- பொய்கையிலபிஷேக அலங்கார ஆராதனைகள்
- சரணமிது தானென்று சரணாகதியடைந்தார்க்கு
- நற்பவி கிட்டும் தருணமிதுதான்
- பொற்பதந்தனில் கற்பக விருட்சமாய்ப் பணிந்தார்க்கு
- நற்கதியளித்திடும் சரணமிதுதான்
- கரணம் தப்பினால் மரணமெனும் நிலையிலும்
- கருணையுடன் காத்தருளவரும் காரணம்
- நாமறியாத, புரியாத புதிர் தான்
- கஜேந்திர மோட்சமாய் கணப்பொழுதில் வந்து கடைத்தேற்றும்
- கடாட்சமும் கந்தனின் கரிசனம்தான்
- ஆறுதலையுடன் ஆறுதல்தரும் ஆறுமுகன்
- அழகன் முருகன்தானந்தக் கந்தன், சேந்தன் தான்
- வேலன் சண்முகன் சுவாமிநாதன் கடம்பன் கதிர் வேலன்
- மால்மருகனென ஆயிரம் நாமாக்களி லழைப்பினும்
- நம் பிரசாந்தி சாயி சுப்பிரமணியனுக்குச்
- சந்தோஷம் தானதுவும் நமது சங்கல்பம்
- அனுக்கிரகம்தான்
- சாயி கந்தவேல் முருகனுக்கு அரோகரா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: