சரணமிதுதான்

  • பிரணவ ஸ்வரூப சாயி குகனுக்கு சரவணப்
  • பொய்கையிலபிஷேக அலங்கார ஆராதனைகள்
  • சரணமிது தானென்று சரணாகதியடைந்தார்க்கு
  • நற்பவி கிட்டும் தருணமிதுதான்
  • பொற்பதந்தனில் கற்பக விருட்சமாய்ப் பணிந்தார்க்கு
  • நற்கதியளித்திடும் சரணமிதுதான்
  • கரணம் தப்பினால் மரணமெனும் நிலையிலும்
  • கருணையுடன் காத்தருளவரும் காரணம்
  • நாமறியாத, புரியாத புதிர் தான்
  • கஜேந்திர மோட்சமாய் கணப்பொழுதில் வந்து கடைத்தேற்றும்
  • கடாட்சமும் கந்தனின் கரிசனம்தான்
  • ஆறுதலையுடன் ஆறுதல்தரும் ஆறுமுகன்
  • அழகன் முருகன்தானந்தக் கந்தன், சேந்தன் தான்
  • வேலன் சண்முகன் சுவாமிநாதன் கடம்பன் கதிர் வேலன்
  • மால்மருகனென ஆயிரம் நாமாக்களி லழைப்பினும்
  • நம் பிரசாந்தி சாயி சுப்பிரமணியனுக்குச்
  • சந்தோஷம் தானதுவும் நமது சங்கல்பம்
  • அனுக்கிரகம்தான்
  • சாயி கந்தவேல் முருகனுக்கு அரோகரா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0