அன்னையர் தினம்
- ஆயிரம் அன்னையர்க்குச் சமமான அன்புத்
- தெய்வ அன்னை உன்னைத் தெரிந்து தேர்ந்தெடுத்த
- ஈஸ்வரம்மாவின் உனது சங்கல்பமாம்
- அன்னையர் தினம் இன்று செகம் அகம் மகிழ்கிறது
- அன்னையர் தினம், உன் தினம், தினமும் அனுதினமும்தான்
- என்றெண்ணி, யெண்ணி அகமும் முகமுமாய்
- மனம் மகிழ்கின்றது
- ஒரு அன்னைக்குப் பெருமை தினம் இன்று – சாயிஅம்மா
- நீதானே அன்னையர்க் கெல்லாம்
- அன்னை யம்மா சாயி அம்மா
- இவ்வகிலத்திற்கே என்றுமே – என மனம் மகிழ்ந்து
- அன்புப் பண்பாடுகின்றேன் அம்மா – இன்று
- இருவிழி நனைந்து நெக்குருகி ஆனந்தக்கண்ணீர்
- பெருகுது நன்று இன்று
- ஈஸ்வரம்மாவுக்கு நினைவாய் விழா எடுக்கிறாய் – நீ
- சாயீஸ்வரி அம்மாவாய்
- பன்மதப் பக்தருக்குமாய் உலா வருகிறாய் நீ
- அன்பு, கருணை, பிரேமை, சத்தியம், தர்மம்,
- எல்லாம் நீ தானே – அதுதான் சாஸ்வதமே
- என்புருகி எல்லையிலாத் துதி பாடுகிறேன் உன்னை
- உயிர் உள்ள வரைதான் உயிர் அன்னையை நினைக்கும்
- நீயோ பக்தர்களெங்களின் ஆத்மாவில் தானுறைகிறாய்
- என்றும் உந்தன் நினைவுடன் வாழ்ந்திடப்
- பிறவிகளில் தொடர்ந்து தொடர்வாய், தொடர்கிறாய்
- இச்சென்மத்தில் நீ கிடைத்திட்ட வரம் நீ அம்மா – சாயிமா
- எச்செகத்து மிருக்கின்ற பரம் அம்மா நீ பிரம்மமாய்
- சத்தியமான சாத்தியமாய் சாஸ்வதமாய்,
- சரித்திரமாய், பிரசவமும் பார்த்துள்ளாய் அம்மா
- பிற தேசத்தும் நீயே பயணித்துப் பிரவேசித்துள்ளாய்
- பக்தருக்குப் பரவசமாகிவிட உன் கருணைதனைப்
- பிரயோகித்தாய், பிரவாகித்தாய்
- பரசிவமாய் வியாபகமாய்ப் பரிதவிப்போர்க்குதயை
- பலப்பல கருணையாய்ச் செய்தாய் நீ
- பரீட்சார்த்தமாய் பராபரமாய் அம்மா
- இக பர சுகமாயுன் பக்தருக்குத் தாயாய்ப் பல்லருள் செய்தாய்
- தூய்மையின் வடிவமே, நீ தான் தக்க துணையும் நீதானம்மா
- அம்மா தாய்மையாய் உந்தனைப்போற்றி உயிரில்
- தொடர்வோம் அம்மா
- வாய்மையாயிருந்து மட்டும் வாழ வைத்திட்டால் போதும்
- – உன் தாய்மை என்றும் காத்து வழி நடத்தும் இது உண்மை அம்மா
- அன்னை தந்தையும் அனுதினமும் நீதானம்மா
- என்றும் உடனிருந்து காத்திட வரம்தா அம்மா
- உனை மறவாத உள்ளமும் மனிதசேவையும்
- செய்திட பலம்தா அம்மா
- உன் அடி தொழ அனுக்கிரஹம் தருவாய் அம்மா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்