ஈஸ்வரம்மா தினம்

  • ஈஸ்வரம்மாவே உன் ஈடிலா மணி வயிற்றுப் பெட்டகத்தில்
  • ஈசனை ஈன்றெடுக்க எத்துனை தவம் செய்தாய் ?
  • ஈங்குனைப் போற்றித் துதித்திட ஈகை செய்வித்தாய் நீ
  • ஈசனுடன் அடிபணிந்து உன்னை இனிதே
  • இன்று வணங்குகிறோம் அம்மா
  • ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டினாயாம்
  • – உன் ஊணுடல் ஆலயக் கருவறையில் கருணாமயன்
  • கார்த்திகைச் சோமவாரத்தில் ஸ்ரீ ராமனின் அவதாரம்
  • ஆருத்ராவின் ஆனந்தச்சிவனாயும் அவதரித்து
  • உன்னில் வந்ததுன்வரம் தானே அம்மா
  • சத்தியநாராயணப் பிரசாதம் உண்டவர் எத்தனையோ ?
  • அச் சாத்தியநாராயணன் உருவானது உதித்தது உன்னில்
  • மட்டும்தானே !
  • நித்தியவாசம் செய்யும் சத்தியசாயி அவதாரமாய் – நீ
  • பத்தியம் இருந்து பாருக்குப் பாங்காய் அளித்தாயோ?
  • தேவகிரி அம்மாவுக்கு இறைவன் சிவனே மகவாய்
  • வந்துதித்தார் (முன்னில்)
  • சாயி சிவன் இங்கு மகனாயுதிக்க உன்னைத்
  • தேர்வு செய்துவிட்டார் (பின்னில்)
  • யசோதையாய் சுப்பம்மாவும் சுலபமாய்க்கிட்டிவிட்டார் இரு
  • தாய்களும் பேணி, இறைவனை இனிதாய் ஈந்து விட்டீர்கள்
  • இறைவனுக்கும் உகந்து இசைந்து அன்பில் மலர்ந்து விட்டீர்கள்
  • கற்பக விருட்சக் காட்சிகள்கண்டு களிப்பெய்திருப்பாய்
  • அற்புதங்கள் பல கண்டு அதிசயப்பட்டிருப்பாய்
  • குன்றுமலைகளில் தேடி சோறு குழம்புடன் இரு தாய்களும்
  • தேடித்தேடிப் பயணித்தீர்கள்
  • தாய் உன்னை மாயை வந்துவிட்டது என்ற போதும்
  • நீ சிரித்துத்தான் இருப்பாய். கடிந்திருக்கமாட்டாய்
  • கட்டைச்செருப்பு சத்தத்தில் சீரடிபாபாவை அறிந்திருந்தாய் நீ
  • கண்ணனின் முரளி வேணுகான நாமம் கேட்டாய்
  • தசாவதாரக் காட்சி கண்டு தார்மீக சுத்தி அடைந்திருப்பாய்
  • எண்ணிலா பலலீலைகள் கண்டு புளகாங்கிதம் நீ
  • அடைந்திருப்பாய்
  • இன்றுன் துணையுடன் இணையாய் இருக்கிறாய்
  • உன் எழில் ஆலயத்தில்
  • என்றும் உனை மறவாத அத்தியாயம் ஆகிவிட்டாய்
  • பர்த்தி வரும் பக்தர்கள் உன்னைச் சம
  • ஆதியாய்க் காண்கின்றனர்
  • பார்த்திபன் தாயுனைக் கண்டு
  • ஆனந்தப் பரவசமடைகின்றனர்
  • சாகாவரம் பெற்ற சாத்வீகத்தாயே ஈஸ்வரம்மா
  • சித்ராவதி நதிதீரவாசியின் தெரிந்தெடுத்த தாயே !
  • பர்த்திபுரியிலுன் மகவின் அருட்கருணையுடன், இன்றும்,
  • என்றும், வணங்கித் துதித்திருப்போம் அம்மா
  • பிறவிப் பயனெய்திவிட்ட தேர்ந்தெடுத்த தாய் நீ
  • சாயி பக்தர்கள் பிறவிப் பயனெய்திடத் தெரிந்தெடுத்த
  • தாய் நம் ஸ்வாமி
  • பெற்றோரும் மக்களும் தேர்ந்தெடுத்து வருவதல்ல
  • மானுடப் பிறவி
  • நம் பகவானால் தெரிந்து, தேர்ந்தெடுத்த, தாயுன்னை அனைவரும் உணர்ந்து, புரிந்து, புகழ்ந்து, என்றென்றும் வணங்கி மகிழ்வோம் அம்மா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0