ஆங்கிலப் புத்தாண்டு தினம்
- விடிவெள்ளியாய்த் திருவாதிரையில் அவதரித்து ஆன்மீக
- விடியல் ஆகினாய்
- வியாபகமாய் அவனிதனில் திருவிளக்கின் வெளிச்சமாகினாய்
- விரும்பியுனைத் தொழுதிட நல்விளக்கமாயினாய்
- அடிக் கரும்பின் சுவை போலுன்னடி தொழுதிடப்
- பக்தியிலுருவாக்கினாய்
- புத்தாண்டு பிறந்து புதுப்பொலிவாய் மலரட்டும்
- புத்தம்புதுப்பூவாய்ப் பூத்துன் னருள்மணம் பரப்பட்டும்
- நித்தமொரதிசய ஆனந்த அற்புத முன்னால் பெருகட்டும்
- அது ஸ்ரீ சத்திய சாயி நாதனென்ற நாமம் பாடியே மகிழட்டும்
- எண்ணில், எண்ணத்திடங்கா அதிசயங்களாற்றுகிறாய்
- மண்ணில் நல்லவண்ணம் வாழ்வியல் வாழ வைக்கிறாய்
- சொல்லில் நினைவில் உன் நாமஸ்மரணையில்
- நற்கதியளிக்கிறாய்
- உன்னிலுறைந்திட்ட உன்னன்பில் மலர்ந்திட்ட
- பக்தரைக் காக்கிறாய்
- பாரத அன்னை மகிழப் பர்த்தியம்பதியைப் பன்னாட்டுப்
பக்தர் பார்க்கச் செய்தாயுனை நிந்தித்தோரையும்
பக்தியுடனுன்னடி தொழுதிடப்பணித்தாய்
உலகத்தோர்க்கும் சத்ய தர்ம சாந்தி பிரேமை
- அகிம்சைப் பாதை காட்டிட்டாயுனைச் சிந்தித்த, சந்தித்த,
பக்தர்களுக்குன் கமலமலர்ப்பதமலரடிதந்திட்டாய்
கடந்தவை கடந்திடட்டும், காலங்கள் மாறட்டும்,
துயர்கள்தீரட்டும், நடப்பவைகள் நல்லவைகளாய், அல்லன
- கடப்பதா யருள்தந்தே நீயாட்கொள்ள வேண்டும்
- வையத்தி லனைத்துயிர்களிலு முன்னருட்ருணை
- யன்பு தொடர வேண்டும்
- நெஞ்சத்தில் நீ அகலாமல் நினைத்தபோதுனை யழைத்திடத்
- தான் வந்திடவேண்டும்
- சனாதன தர்மம் தழைத்து மனிதரில்
- மனிதம் நிலைத்திடவேண்டும்
- சனாதன சாரதியாய் நீ நல்வழி காட்டி நற்றுணையாக
- வேண்டும்
- சன்மார்க்கத்தில் சாந்தி நிலவி அன்பு மதம்
- மொழியாலிணைந்திடல் வேண்டும்
- உன் மார்க்கம் சத்திய கீதைப் பாதையில் சாத்வீகம் மலர்ந்திட
- உன் சங்கல்பம் சாத்தியமாக வேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே, உனக்கு ஆத்மார்த்த,
- ஆனந்த வந்தனம் சுவாமி சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்