சாயி சிவமே

  • திருவாதிரை நட்சத்திரத்திருவே ஸ்ரீ சத்திய சாயீசா – உன்
  • திருமுகதரிசனம்தருமே நித்திய சந்தோசத்தைக்
  • கற்பகத் தருவாய் திரு அவதாரமாய்ப்
  • பர்த்தியிலவதரித்த பர்த்தீசாசா உன் ஒரு அவதாரம்
  • தந்ததே விஸ்வரூப பவதாரமே
  • மதயானையைத் தோலாடை யாக்கினாய் மும்மலங்கள்
  • போக்கி யுன்னடியார்க்குமே நற்கதியளித்திட்டாய்
  • பிச்சாடனரா யருட்பிச்சையளித்தாய்
  • கலியுக அவதாரம் செய்துதான் களிப்பதனைத் தந்து விட்டாய்
  • ஆதிசேஷனுக்கும் வியாக்ரபாதருக்கும் தரிசனம் தந்தாய்
  • ஆதி பார்வதி தேவிக்கு உன் மண ஒப்புதல் வரம் தந்தாய்
  • சோதியாய்த் திருவண்ணாமலை தீபமாகி னாயுன்னருட்
  • சுடரொளியில் எங்களைப் பணிந்திடப் பணித்திட்டாய்
  • வலதூன்றியிட நடனமாடிக்களிப் பெய்தச் செய்தும்
  • நற்காட்சி தந்தகமகிழ வைத்திட்டாய்
  • சேந்தனார் தம்களியுண்டு களிப்பெய்தினாய்
  • அசரீரியில் அடுத்தடுத்துப் பதிகம் பாடச்செய்தாய்
  • திருத்தேர் அசைந்தாடிக் கண்டோர்மனம் ஊஞ்சலாடியுனை
  • வந்தடைந்தோரின் சந்ததிகளைச் சாந்நித்ய மாக்கினாய்
  • சத்ய தர்மசாந்தி பிரேமை அகிம்சையில்
  • அறம் வளர்த்திட்டாயதில்
  • நித்தியமாய், நிர்மலமாய், வாழ்வியலாக்கி, யுனதன்
  • பாசியருளிட்டாய்
  • சனாதன ஆன்மீக பாதையில் பீடு நடை போடவைத் தாயதில்
  • அன்பு மதம் மொழியால் அனுபோகப் படுத்திவிட்டாய் சுவாமி
  • திருவாதிரையில் ஆதிரையானுன் னருட்கருணை
  • யனைவர்க்கும் கிட்டட்டும்
  • பஞ்சாட்சர சிவனே உன் அருள்வெள்ளத்திலனைத்
  • துயிர்களும் ஆனந்திக் கட்டும்
  • நெஞ்சமதில் மஞ்சம் அமைத்தேயதிலு னைத் துஞ்ச வைக்கட்டும்
  • சாயி சாயி சாயி என்று அங்கஅணுக்களிலுன்
  • நாமம் எதிலுமெங்கும் எப்போதுமொலித்தே
  • ஆத்மாவிலுறையட்டும், சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0