தீப ஒளித்திருநாள்

  • தீபாவளித் திருநாளில் தீப ஒளியாய் நீ வர வேண்டும் – உன்
  • நாமாவளிகளும் பஜன்களும் நாமணக்கப் பாட வேண்டும்
  • கவி புனைந்து பாக்களினால் களிப்பெய்திட வேண்டும்
  • சிலை, சித்திரமா யுனை வடித்து மகிழ வேண்டும்
  • உனதவதார அற்புதங்கள், மகிமைகள், புத்தகங்களால்
  • புகழப்பட்டுப் புரிந்து கொள்ளவேண்டும்
  • சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, கருணை, தயையை,
  • சனாதனத்தை, மனிதம் மனதில் ஏற்றி மகிழ்வுற வேண்டும்
  • நில மகளின் எண் திக்குகளிலுமுன தெண்ண்ணங்களும்
  • வண்ணங் களும் வடிவமைக்கப்படுகின்றன
  • சிறு துளி நீர்த் துளிகளாயுன் அன்புமதக்கடலில் சங்கமிக்கிறது
  • வளி, வெளியில், நாமஸ்மரணை, பஜன்களாய்க் காற்றிலும்
  • சுவாசமாயும், ஒலிக்கின்றன
  • அக்னிவெம்மையாய் வேள்வியிலே மிளிர்கின்றன
  • வானமண்டலத்தின் நட்சத்திரங்களாயுனது பக்தர்கள்
  • வையமெல்லாமுன் சனாதன தர்மத்தில்தான்மிளிர்கின்றனர்
  • பஞ்சபூதங்களுமுன் னிலடக்கமென்றுணர வைத்திட்டாய்
  • இராமாவதாரத்தில் வால்மீகி மூலமும், கிருஷ்ணாவதாரத்தில்
  • வியாசமுனி, வாயிலாகவும், தர்ம வழியும், கீதைப்பாதையும்
  • காட்டி விட்டாய்
  • கலியுகத்தில் ஸ்ரீ சத்திய சாயிபாபாவாய் அவதாரமாகி
  • அன்பு மதத்தைத்தான் அதிசயமாக்கினாய்.
  • தீபமாய்த் திருவாய்க் கருவாய், கலையாய்,
  • பஞ்ச பூதங்களிலுமாய், நாடு நலம் பெற,
  • வீடு சுகம் பெறப், பயிர்கள் பெருவளரப் பசிப்பிணியகல,
  • வையத்திலனைத்துயிர்களு முறவுகளும் உவகையுற,
  • உலகின் ஆன்மீக குருவாய்நம் இந்தியாவை ஏற்று
  • வழிநடத்திட, நடந்திட,
  • அல்லன நீக்கி, நல்லன தந்தும், தரிசனம், ஸ்பரிசனம்,
  • சம்பாஷனத்தாலென்றுமே துணை நின்றும்
  • காத்தருளவேண்டும்
  • தீப ஒளியாய், வளியாய், வெளியாய், வாழ்வில்
  • வளந்தந்தருளர வேண்டும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0