சுந்தர பாதம்
- சுந்தர பாதம் சாயி சுந்தரன் பாதம்
- சுகிர்தம் சுபிட்சம் தரும் மந்திரப்பாதம்
- சாந்நித்தியம் அளித்திடும் சங்கரன் பாதம்
- பிரசாந்தி தேவனின் பிரியமான புனிதப் பாதம்
- பன்மதப் பக்தர் துதித்திடும் பவித்திரபப் பாதம்
- எம்மதமும் சம்மதம்தான் என்று உரைத்திட்ட சாயீசன் பாதம்
- நல்பக்தர்கள் நாடிவரும் நற்றுனைப் பாதம்
- பக்திதனில் பரவசிக்கும் பரசிவனின் பாதம்
- முக்தி தந்து காத்திடும் முன்னவனின் பாதம்
- சத்ய, தர்ம சாந்தி பிரேமை அகிம்சையிலே ஆட்கொண்ட பாதம்
- நித்திய சனாதன தர்மத்தில் நிலைக்க வைக்கும் பாதம்
- நிம்மதியளித்திட வந்துதித்த நிர்மலன் பாதம்
- கோகுலத்தின் பால ஞாலநாயகனாம் கண்ணணின்
- நந்த கோப கோவர்த்தனன் பாதம்
- ஈஸ்வரம்மா ஈன்றெடுத்த இறை அவதாரப் பாதம்
- நானிலத்தில் இணையில்லாத சாயிநாதன் பாதம்
- ஏழுமலை ஏறிவந்து துதித்திடும் கோவிந்தன் பாதம்
- குன்றுதோறும் நின்றருளும் சாயிகுமரனின் பாதம்
- அம்பிகையின்அருந்தவப் பத்ம பாதம்
- பர்த்திவாச ஸ்ரீ சத்திய சாயி தெய்வமே
- உன் சரணம் போற்றியே வந்தனம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்