சுந்தர பாதம்

  • சுந்தர பாதம் சாயி சுந்தரன் பாதம்
  • சுகிர்தம் சுபிட்சம் தரும் மந்திரப்பாதம்
  • சாந்நித்தியம் அளித்திடும் சங்கரன் பாதம்
  • பிரசாந்தி தேவனின் பிரியமான புனிதப் பாதம்
  • பன்மதப் பக்தர் துதித்திடும் பவித்திரபப் பாதம்
  • எம்மதமும் சம்மதம்தான் என்று உரைத்திட்ட சாயீசன் பாதம்
  • நல்பக்தர்கள் நாடிவரும் நற்றுனைப் பாதம்
  • பக்திதனில் பரவசிக்கும் பரசிவனின் பாதம்
  • முக்தி தந்து காத்திடும் முன்னவனின் பாதம்
  • சத்ய, தர்ம சாந்தி பிரேமை அகிம்சையிலே ஆட்கொண்ட பாதம்
  • நித்திய சனாதன தர்மத்தில் நிலைக்க வைக்கும் பாதம்
  • நிம்மதியளித்திட வந்துதித்த நிர்மலன் பாதம்
  • கோகுலத்தின் பால ஞாலநாயகனாம் கண்ணணின்
  • நந்த கோப கோவர்த்தனன் பாதம்
  • ஈஸ்வரம்மா ஈன்றெடுத்த இறை அவதாரப் பாதம்
  • நானிலத்தில் இணையில்லாத சாயிநாதன் பாதம்
  • ஏழுமலை ஏறிவந்து துதித்திடும் கோவிந்தன் பாதம்
  • குன்றுதோறும் நின்றருளும் சாயிகுமரனின் பாதம்
  • அம்பிகையின்அருந்தவப் பத்ம பாதம்
  • பர்த்திவாச ஸ்ரீ சத்திய சாயி தெய்வமே
  • உன் சரணம் போற்றியே வந்தனம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0