வழிக்குத் துணை
- வழிக்குத் துணையுனது பஜன், நாமஸ்மரணையும்
- கீர்த்தனமும் விழிக்குத் துணையுன்
- திவ்ய தரிசனமும் கரிசனமும்
- பழிவராமற் காத்திடுமுன் சங்கல்பமும் சாந்நித்தியமும்
- வாழ்வியலில் இருவினை தடுத்தே வாழவைத்
- திடுமுன் அன்பும் கருணையும்
- பிழை பொறுத்துப் பிழைக்க வைத்திடுமுன்
- காருண்யமும் தரிசனமும்
- மழையாய்ப் பொழிந்துன்னருள் பயிர்களையும்
- உயிர்களையும் பசுமையாய்த் தழைக்க வைத்திடும்
- இறங்கி இரங்கியே இனிதாய் வந்தின்னல் நீக்கித்
- தந்தும் காத்தருளும் பன்மதப் பக்த அன்பர்களின்
- மேலுன் ஈகையும் தயையும்
- மழையாய்ப் பொழிந்திடுமுன் னருட்கொடையு மருளும்
- உன் அன்பருளுரையும் சனாதனமும்
- உனதன்பு மதத்திலடைக்கலமானதும் பிறவிப்பயனே
- எங்கெங்கோ தோன்றிய உன் பக்த நதிகள் பவசாகரக்கடலாம்
- உன் சங்கமத் திருவடியில் கூடிச்சங்கமித்து அங்கம் வகிக்கும்
- உன் சேவைப் பணிகளாற்றுதல் முக்திக்கு முகமன் கூறி
- முழுமனதின் சிம்மாசனத்திலுனைத்
- தானமர் வித்தானந்தம் கொள்ளும்
- வரவேண்டு மருள் தரவேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயீசா உனக்கு
- ஆத்ம நித்ய சத்ய வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்