சாயி முகுந்தன்
- கதம்பவனப் பூஞ்சோலையில் சாயிகிருஷ்ணா உன்
- காருண்ய மலர்கள் மலர்ந்திடுமே மாயக் கிருஷ்ணா
- ஆரண்யமென்ன அயோத்தி தானென்ன எங்கும் உன்
- கருணை மழை பொழியுமே ஆனந்த வெள்ளமாய் வடியுமே
- முகுந்தனுன் வேணுகானமதில் உயிர்கள் அனைத்தும்
- மயங்குமே தகுந்த உன் குழலோசை மனம் புகுந்து
- லயிக்குமே
- மிகுந்த உன்னன்புக்கருணையும் உலகெல்லாம் வியக்குமே
- பர்த்திப் பார்த்தனுன் பக்திப் பிரவாகம்தான் பரவுமே
- குடைப்பிள்ளை யாரின் கொடைதானுன்
- பக்தப் பிள்ளைகளைத் தொடருமே
- பிரசாந்திச் சாயி கணேஷின் நேசம்தான் பெருகுமே
- துதித்தவருக் கெல்லாமும் பலனைப்பெருக்குமே
- சாயி சுப்பிரமணிய சுவாமியுனது சுப்ரபாதம் சுகமாய்
- வளிமண் டலத்தில் பரவுமே
- ஸ்ரீராம அவதார மகிமையுமுன் சாயிராம அவதாரத்தின்
- பவதாரத்தில் விரியுமே
- கோகுலத்து கோப கோபியர்கள்தானின்று
- கோகுல ஆநிரைகளாய்
- மதுரா பிருந்தாவனச் சகாக்களே இன்று உன்
- பக்தர்களாயமுனையின் நீர்த்துளிகளாயு னது
- அத்தியந்த அன்பர்களின் பெருவெள்ளமாய்
- இரு தாய்கள் வளர்த்திட்ட ஒருமகனாமுனையின்று
- பர்த்தி யவதாரமாய்த் தெரியும் எண்ணற்ற பேர்களுக்கு
- உன் காந்த அபயஹஸ்தம்மறவாதுனைத் தரிசித்த பேர்களுக்கும்
- வேறு நினைவேதும் தெரியாதுன் சம்பாஷனத்தின் ஆகர்ஷனம்
- அள்ள அள்ளக் குறையாது சுவாமி உன் அன்பின் ஆனத்தத்வம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்