பிரம்மாண்ட நாயகன்

  • நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
  • உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன்
  • அருட்கருணையின் வார்ப்பு
  • சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம்
  • கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம்
  • நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம்
  • சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக்
  • கிட்டிடுமது உன் அபயஹஸ்தமாம் மோட்சம்
  • வியாழனாய் பர்த்திதனில வதரித்த வெள்ளியே
  • விடிவெள்ளி தரவந்த ரத்னாகர குலத் திங்களே
  • சித்ராவதி நதி தீர மங்காச் சித்திரமே
  • சடுதியில் வந்து காத்தருளும் சாகித்திய சரித்திரமே
  • நீதான் எங்கள் அகத் தவமே, உன் துணையிருக்க ஏது பயமே
  • உன் நாமஸ்மரணை அளிக்கும் தானெதிலும் ஜெயமே
  • உன் பக்தர்களின் சுயநலமில்லா ஆத்மார்த்த சேவைகள்
  • அளிக்குமுனக்கு ஆனந்தம்
  • அக் கருணையின் அன்பால் நீ அளிக்கும்
  • ஆசி எங்களுக்கு அனந்தம்
  • பிரம்மாண்ட நாயகா பரப்பிரம்மமே பர்த்திவாசனே சிவசக்தி
  • ஸ்வரூபமாய் வந்து நல்லருள் புரிவாயே போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0