பிரம்மாண்ட நாயகன்
- நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
- உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன்
- அருட்கருணையின் வார்ப்பு
- சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம்
- கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம்
- நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம்
- சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக்
- கிட்டிடுமது உன் அபயஹஸ்தமாம் மோட்சம்
- வியாழனாய் பர்த்திதனில வதரித்த வெள்ளியே
- விடிவெள்ளி தரவந்த ரத்னாகர குலத் திங்களே
- சித்ராவதி நதி தீர மங்காச் சித்திரமே
- சடுதியில் வந்து காத்தருளும் சாகித்திய சரித்திரமே
- நீதான் எங்கள் அகத் தவமே, உன் துணையிருக்க ஏது பயமே
- உன் நாமஸ்மரணை அளிக்கும் தானெதிலும் ஜெயமே
- உன் பக்தர்களின் சுயநலமில்லா ஆத்மார்த்த சேவைகள்
- அளிக்குமுனக்கு ஆனந்தம்
- அக் கருணையின் அன்பால் நீ அளிக்கும்
- ஆசி எங்களுக்கு அனந்தம்
- பிரம்மாண்ட நாயகா பரப்பிரம்மமே பர்த்திவாசனே சிவசக்தி
- ஸ்வரூபமாய் வந்து நல்லருள் புரிவாயே போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்