ஞானத்தில் சாயி நீ

  • ஞாயிறாய் சாயி ஞாலத்தில் உதயம்
  • ஞானத்தில் சாயிநீயே கலைவாணி வடிவம்
  • உன் சங்கல்ப மகிமைகளில்தானே பக்தர்களின் படிவம்
  • உன தபயக்கரங்களில் பெற்றிடுவாய்தான் கடிதம்
  • உன் பங்கயப் பாதங்கள் தருமே பக்தர்களுக்கு அபயம்
  • உனது தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனங்களுன்
  • னருகாமையின் தருணம்
  • சத்திய சாயிநாதனுன் நாமஸ்மரணைதானே
  • எங்களின் ஸ்மரணம் பிரதமம்
  • நீ பணித்திட்ட பற்பலசேவைப் பணிகளே எங்களின் பிரசாதம்
  • நியாயமான கோரிக்கைகளை நீ நடத்தி வைப்பதுன் பிரகாசம்
  • உன் கருணை அன்பு அருள் ஒன்றே எங்களின் பிரதாதம்
  • உனதடி பணிகின்றோம் சரணம்
  • ஸ்ரீ சத்திய சாயி நாதனே போற்றி
  • போற்றியே உனக்கு ஆத்ம வந்தனம், ஆனந்த பக்திப் பிரபாவம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0