பக்த லக்ஷணம்
- சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில்
- திளைத்திருத்தல் மதுரம்
- சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும்
- சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக
- சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம்
- உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப்
- பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை
- நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில்
- திளைத்திருத்தலும் மதுரம்
- உன் அவதார காலத்திலுன்னருளில் முகிழ்த்திருப்பதும் மதுரம்
- இறையே எங்களின் மறையே பர்த்திவாசனுன்
- பரமப் பவித்ரப் பிரசாந்தியில் பன்முகப்பக்தர்களும்
- பங்குபெறும் அணிவகுப்புகளிலும் மகிழ்ந்து
- திளைழ்த்திருப்பதுவும் மதுரம்
- பர்த்தியில் ஒவ்வொரு நாளும் திருநாள்தான்
- உன்னருட் கருணையில் திளைக்கும் ஒவ்வொரு
- கணமும் திரு உன் நாள்தான்
- மும்மலங்கள் போக்கியே நீக்கியே மனிதம்
- மலர்ந்திட அருள்வாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்