ஆடிச் செவ்வாய்
- பிரம்மமும் ஆத்மாவு மிணைந்த வடிவமே காமாட்சி
- சாயி தேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன்
- பனிமலை மன்னன் இமவானின் வம்ச
- ஒப்பற்ற சூடாமணியே!
- நினைத்ததை அளிக்கவல்ல சிந்தாமணித்தாயே
- காமாட்சி சாயிதேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன்
- கம்பா நதியில் சிவலிங்கம் அமைத்துப் பூசனை செய்வித்து
- வந்த வெள்ளத்தால் சிவசக்தி சொரூபமாய்
- ஐக்கியமாகிக் கம்பாநதியை அருட்பிரவாஹமாக்கிய
- காமாட்சித்தாயே சாயி தேவி உன்னை
- நமஸ்கரிக்கின்றேன்
- நாடி வருவோர்க்கு மனதில் அஞ்ஞானம்
- ஜடத்தன்மை யேற்படாது தடுத்துத் தீவினைகளைந்து
- நல்வினை மட்டுமளிப்பவளே காமாட்சி
- சாயிதேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன்
- பிறைச்சந்திரன் தரித்துப்பஞ்ச ஆயுதங்களுடன் திகழ்பவளே
- வரத ஸோதரி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற காமாட்சி
- சாயி தேவியே உன்னை நமஸ்கரிக்கின்றேன்
- ஆடிச் செவ்வாயில் தேடி வந்து மஞ்சள் குங்குமம்
- மங்கல வாழ்வை அளிப்பாயே, மங்கையர்குலம் காப்பாயே.
- காசி விசாலாட்சியாய் பர்த்தீஸ்வரி பரமேஸ்வரியாய்
- சாயிதேவி அன்னபூரணி, அன்னம்பாலித் தருள்வாய்
- காமாட்சித்தாயே உன்னை நமஸ்கரிக்கின்றேன்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்