ஆடிவெள்ளியில்
- ஆடி வெள்ளம் பெருக்கெடுத்து வருவது கண்ணிற்கு அழகு
- உன்னைத் தேடி வரும் பக்தர் மனம் உன் அன்புக்கு அழகு
- நாடி வந்து நலம் நல்கும் உன் கருணையே பெரிது
- ஓடி வந்து ஓம்காரமாய் ஒலிக்கும் உன் அருள் வடிவம் அரிது
- பஜன்கள் பாடி வந்துன், பன்னாட்டுப் பன்முகப் பக்தர் மகிழும்
- ஆனந்தம் அழகுக்கு அழகு
- கோடி சென்மம் தொடர்ந்த, தொடர்ந்து, வருமுன் கருணைச்
- சாந்நித்தியம் அழகோ அழகு
- மனதில் நிலைபெற்றிருக்கும் உன் திருவடித் தாமரைகள்
- பவக்கடலைக் கடக்க உதவும் மரக்கலம், மனக்களம்
- மகிமைத்தலம், மஹாத்மிய வலம்
- அக்னிக் காட்டினை அழிக்கவல்ல அக்னி ஜுவாலை
- நவரத்தின ஆபரணங்கள் அணிந்த சாயிமா தேவியின்
- திருப்பாதங்கள்தான் தூண்டாமணி விளக்கு
- சாயி அபிராமி, சங்கரி, புவனேஸ்வரித்தாயே அனைவருக்கும்
- சகல சௌபாக்கியம் அளிக்க ஆடி வெள்ளியில்
- பூரணத்துவப் பௌர்ணமியாய் சாயி
- காயத்திரித்தாயே ஆனந்தமாய் வருவாயே
- ஆடிவெள்ளி கூடி வந்துன் பண்களிசைத்துச்
- சத்சங்கத்தில் திளைத்துன் சேவைகளில்
- ஆத்மானந்தமடைந்திட அருள்புரிவாயே
- அங்காள அம்மையாக சாயீஸ்வரித்தாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்