அறுபத்து நான்கிலும்

  • கவின்மிகு கலைகள் அறுபத்தி நான்கிலும் உன் சாந்நித்தியம்
  • எழில்மிகு இயற்கை எல்லாமுன் சங்கல்பம்
  • குயில் தருமிசையும் உனது படைப்புப் பரண்
  • எங்கள் வாழ்வியலுக்கு நீதானே என்றும் அரண்
  • உனது அன்பு, அருள், அற, உரைகளைக்
  • கேட்டால் வராது முரண்
  • குழல் தரு வேணுகானம் உன் ஏழிசையின் பண்
  • தயைதரு பர்த்தித் தலமுன் ஆன்மீகச் சனாதனக் கூடம்
  • தருமமிகு பக்திப்பாதையில் தானுன் அன்பர்தம் திருக்கூட்டம்
  • தந்தை தாயுமாகி நின்று கருணை செய்யு முந்தன் பரம்
  • பொன்னார் மேனிதானுந்தன் நிறம்
  • சத்தியமே உன்னருட் கருணையின் தரம்
  • இக்கலியுகத்தில் தெய்வத்தின் தெய்வமாய்
  • நீ கிட்டியது எங்கள் வரம்
  • கற்பக மரம் கூட உன் கருணையில் கனிகள் தந்தது நிஜம்
  • பக்தர்கள் நாங்கள் என்றுமே உன் பதமலர் அடியில் தஞ்சம்
  • நெஞ்சில் நீ இருக்கையில் அன்புக்கு ஏது பஞ்சம்
  • தாயே உந்தன் மடிதான் எங்களின் மஞ்சம்
  • கொஞ்சம் கூட வற்றாத உன் கருணை தன்னை மறவாதே
  • உன்ஆத்ம பக்தர்களெங்களின் நெஞ்சம்
  • முந்தையே உன்முடிவிலாக் கருணையால் முப்போது
  • மெப்போதும் தப்பாது காத்திடுவாய்
  • வஞ்சம் கூட உன் அருளில் வாடிப்போய்விடும்
  • உன் அத்யந்த பக்தர்களின் ஆத்மார்த்தம்
  • இமயத்தை விஞ்சும், இதயத்தில் தங்கும்
  • பஞ்சமென்பதேதுன் கருணையாலே உன்னைச் சிக்கெனப்
  • பிடித்திட பக்தரிதயம்தான் உன் பக்தியில் மிஞ்சும்
  • ‘நானிருக்கப் பயமேன்’ எனும் உன் வாக்கினில் பயமே அஞ்சும்
  • எங்கள் பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயி நாதனே போற்றி போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0