சர்வ தெய்வமாய்

  • முத்தமிழும், முதுபெருங்கலைகளும் முக்கனியும்
  • நீயானாயதில் மூவுலகும் முகிழ்ந்திருக்கும்
  • முகவரியே நீயானாயதில்
  • முகுந்த, கேசவ, மாதவ, யாதவ, நந்தகோபனும், நீயானாயதில்
  • அரி, அரன், முத்தேவியருமாய்ச், சகல தெய்வங்களும்
  • நீயானாயதிலுன்
  • அத்யந்த, ஆத்மார்த்தப், பக்தர்கள வரவர்கள்
  • துதித்திடும் சர்வ தெய்வம் நீயானாயதில்
  • ஸ்ரீ சத்யசாயி தெய்வமா யவதரித்து வந்து
  • அன்புதெய்வமாய்ச் சகலருக்கும் சாஸ்வதமாய்க்
  • கருணைசெய்கிறாய், கடைத்தேற்றுகிறாய்
  • இருவினைகளகற்றி இன்னல்கள் தீர்க்கிறாய்
  • வேண்டும் நல்லன தந்து இனிதாய் வாழவைக்கிறாய்
  • மனிதம் தருகிறாய், மாண்பு செய்கிறாய்
  • லீலா வினோதங்கள் புரிந்து அதிசயிக்க வைக்கிறாய்
  • எங்கும் எதிலும் காட்சி தந்து மாட்சி செய்கிறாய்,
  • பிறவாமை தந்து மீட்சியளிக்கிறாய்
  • மும்மலங்கள் நீக்கி முக்தியும் தருகிறாய்
  • பற்பல சேவைகளாற்றிடச் சக்தி தருகிறாயுன் சனாதன
  • தர்மத்தில் பக்தி தருகிறாய், சித்தியளிக்கிறாய்
  • சிவமாய்ச் சீலமளிக்கிறாய்
  • உன் பொற்பத மலரடிகள் பாதார விந்தம் பணிதலின்றியிப்
  • பிறவிப்பயனேது சுவாமி ? சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0