என்னுடனிருக்கிறாய்
- அன்பினுக்கு ஏதுஎல்லை ? அவ் வானமும் பூமியும் கூட
- இல்லை யுன்னன்புக் கருணைக்கே, இது மெய்யே
- யுகம் தோறும் ஈரேழு லகமும், தொடர்ந்து வரும் பந்தம்
- பாந்தம், சொந்தம்
- பழவினைகள் பலனாய் இருவினைகள்தான்
- தொடருமதில் அல்லன நீக்கி அற்றவை
- போக்கி உற்றதை மட்டும் உரைத்து உறைவிப்பாய்
- சுவாமி, என்னுடன் நீ இருக்கிறாரென்று எண்ணாமல்
- என்னுள்ளேயே உறைகிறாரென்ற எண்ணத்தை
- உள்வாங்கிக் கொண்டால் நீ
- ஆட்கொண்டிருப்பதையும் சாயி
- உன் ஆட்டுவித்தலையும் உணர்ந்துன்
- கீதைப்பாதைப் வழிநடந்துன் சனாதன தர்மத்தில்
- திளைக்கலாமுன் சங்கமத் திருவகடிளில்
- பணியலாமுன் சாந்நித்யத்தால் மலரலாம்,
- ஆன்மீக பக்திப்பாதைதனில் மிளிரலாம்
- ஸ்ரீ சத்திய சாயி நாராயணா, வேத பாராயணா
- குறையென்றேதுமில்லை சுவாமி
- உன் திருவடித் தாமரைகளுக்கு ஆத்மார்த்த வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்