அருள்மழை
- அருள் மழை பொழிந்திடவே சாயி அவதாரம் ஆகி வந்தாய்
- அவனிதனைக் காத்திடத் தான் பவதாரம் ஆகி நின்றாய்
- இருள்தன்னை நீக்கி இரு வினைகள் போக்கி இன்ப வாழ்வு
- அளித்து விட்டாய்
- மருள் விலக்கி ஆன்மீக சனாதன தர்மத்தில் அழகுடனே
- அமரவைத்தாய்
- வில்லினை வளைத்திட்டே வினைதனையறுத்து விட்டாய்
- வேய்ங்குழலூதி வேற்றுமையைக் களைந்திட்டாய்
- பல்வினை சூழ்ந்திடினுமுன் ‘சாய்ராம்’ எனும்
- மந்திரச் சொல் காத்து நிற்கும்
- நல்வினையளித்து நற்பவி தந்து உள்ளமதில் நீ
- சோதியாய் நிலைத்துவிட்டாய்
- குரு ஸ்ரீ சத்யசாயிக்கு உள்ளமதில் கும்பாபிஷேகம்
- செய்கின்றோம்
- ஸ்ரீ சத்திய சாயிநாதன் உனக்கு உள்ளக்கோயிலில்
- சிம்மாசனமளித்துக் கருவறையில் தொழுகின்றோம்
- மண்டலாபிஷேகங்களாய்ச் சேவைகளாற்றித்
- தொடர்கின்றோம்
- பரப்ரம்மம் சாயிநாதனுக்கு நல் மந்திரங்கள்
- கோடிகோடியாய் அர்ச்சிக்கின்றோம்
- மாதா பிதா குரு தெய்வம் சகாவான
- ஸ்ரீ சத்ய சாயி நாதனுனக்கு வந்தனம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்