‘பங்காரு’

  • மஞ்சளோடு குங்குமமும் மணமிகு நல் மலர்களும்
  • திருமங்கல நாணும் தந்து மங்கள வாழ்வளிப்பாளெங்கள்
  • சிவசக்தி சாயிமா
  • திங்கள் முடி சூடிய சிவனாரின் பாதி பாக உமையாமெங்கள்
  • ஸ்ரீ சத்திய சாயி சிவ சக்தி சாயிமா
  • திருமதியாய்த் திருமிகு இல்லற வாழ்வளித்துக்
  • கருணையளித்திடு வாளவள் திருவாய் மலர்ந்து
  • ‘பங்காரு’ எனப்பாங்காய் விளித்தே நல்லாசி கூறிடுவாள்
  • திருவருளாய்த் திருவுருவாய்த் தினமே காத்தருள்வாள்
  • அவள் திருவீதி உலாவும் திருவதிகைப்பொற்ப பதமு மவள்
  • பக்தர்தம் மனம்தானே ! அதுபக்தியின் மணம்தானே !
  • அலை, கலை, மலை, மாமகள்களாய் மன மந்திரத்திலருளன்பு
  • ஆட்சி செய்வதெங்கள் பர்த்தீஸ்வரி பரமேஸ்வரி பார்வதி
  • ஸ்ரீ சத்யசாயி மா சாயீஸ்வரியே
  • உனக்குச் சரண கமலப்பாதார வந்தனம் அம்மா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0