இறைவன் விலாசம்

Sairam! This is available only in Tamil*

  • ஆரம்பத்திற்கே ஆரம்பமாய்
  • பிரபஞ்ச முடிவற்றப் பேரின்பமாய்
  • ஆதாரத்திற்கே ஆதாரமாய்
  • ஆழ்ந்தகன்ற பேரியக்கமாய்
  • தூய ஒளி நிறை பெருத்துவக்கமாய்
  • கோடித் தாயன்பின் பெருத்துவக்கமாய்
  • தியான முடிவில் நிகழும்
  • ஆனந்த அனுபவமாய்
  • ஞான வடிவில் ஒளிரும்
  • மோன அனுபூதியாய்
  • மோகம் அழிக்க வந்த
  • மோக வடிவமாய்
  • யோகம் அளிக்க வந்த
  • யோக வெளிச்சமாய்
  • பெயரிடப்படாத பெயராய்
  • வர்ணிக்க முடியா வர்ணமாய்
  • அண்ட சராசரமும்
  • நாலரை அடியில்
  • நிமிர்ந்து நடக்கும் அதிசயமாய்…
  • எலும்பு சதையில் பிரபஞ்சமே
  • எழுந்திருக்கும் அற்புதமாய்..
  • சூரிய சந்திரருக்கே
  • கண்கூசும் படியான
  • வெளிச்ச தேகமாய்…
  • இந்திராதி தேவரும்
  • இருகரம் வணங்க
  • இறைவனே நீயாய்
  • மனித வடிவெடுத்த
  • மனிதாபிமானமே
  • மனித மனதிலே தான்
  • உன் சந்நிதானமே
  • என் கவிதையின் காரணமே – கவி
  • வரிகளை வரவேற்கும் தோரணமே
  • மொழியிலாத கவிதையின்
  • முழுமுதற்பூரணமே
  • இருண்ட மேகம் தலையில்
  • சுருண்டு நிற்கும்
  • முடிகளா ? கார்
  • முகில்களா ? கருநாகக்
  • குடைகளா?
  • உன்னை நீயே படைத்து
  • உன்னழகில் நீயே வியந்து வைத்த
  • திருஷ்டிப் பொட்டோ கன்னத்து மச்சம்
  • அருவமாக உருவமாக
  • ஒன்றுமாக இரண்டுமாக
  • ஓரிரண்டின் நடுவுமாக
  • நவமாக நிற்பவனே என்
  • தவமதனை ஏற்பவனே
  • நெருப்பை எரிக்கும்
  • நிலவை உதிர்க்குமுன்
  • பார்வையே மலர்த்தும்
  • வாழ்வை
  • அற்புதம் நீ
  • உருவம் தாங்கி பூமிக்கு வந்த
  • அவதாரம் நீ – உன்
  • பொற்பதம் கங்கையாகி
  • பூமியைத் தழுவிடும்
  • உபகாரம் நீ! கவிச்
  • சொற்பதம் நதியாகி
  • கடலுக்குச் செய்திடும்
  • உபசாரமாய் — உயர்த்
  • தொற்பத உலகுக்கான
  • ஆதவனைச் செய்திடும்
  • அதிகாரம் நீ!
  • சத்தியம் பேசுதல்
  • சாயிராம மந்திரமோதுதல் என
  • பக்தி மனதிற்கான
  • சிருங்காரம் நீ
  • பக்தி ஒன்றையே முழுதாய் அணியும்
  • அலங்காரம் நீ!
  • பூமி என்பதோ
  • பூட்டப்பட்டிருக்கும் பூட்டுகள்
  • உன்
  • ஒவ்வொரு விரல்களுமே
  • ஆன்மிகம் திறக்கும் சாவிகள்!
  • கை அசைவினால் நீ
  • காலம் அசைப்பவன்
  • பிரம்மனையே படைத்த நீ
  • பஸ்பம் படைப்பதா பரம அதிசயம்?
  • வேத உபநிடதமாய் நீ
  • பேசுவதெல்லாம்
  • பிரபஞ்ச ரகசியம்!
  • ஆருயிர்க்கெல்லாம் நீ
  • அவசியம்!
  • ஆன்மாக்களை உன்
  • காலடி கட்டிப்போடும்
  • இதுவல்லவா இறை வசியம்!
  • மனமே ஏனினி கலக்கம்?
  • அற்புதங்கள் ஆண்டவ சாயியின்
  • அன்றாட வழக்கம்!
  • மௌனமே ஆன்மிக முழக்கம்
  • அகந்தையிலிருந்து விடுபட்டால்
  • அப்போதிலிருந்தில்லை புழுக்கம்
  • இறைவனே சத்யசாயியே
  • நீயே இவ்வுலகின்
  • கலங்கரை விளக்கம்!
  • உனக்கெதற்கு இத்தனை விளக்கம்?!
  • கவிஞர் வைரபாரதி
  • (இறைவன் ஒரு கவிதை நூலிலிருந்து…)
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0