முதன்மை நாயகன்
- மூலாதார முதன்மை நாயகனுனக்கு மங்களம்
- லீலா வினோதப் பிரசாந்தி சாயிநாதனுனக்கு மங் களம்
- ஆய கலைகளை ஆட்டுவிக்கும் விக்னவிநாசகனுனக்கு
- மங்களம்
- தூய வெண்மை அங்கியில் ஊஞ்சலாடும்
- உமைபாலகனுனக்கு மங்களம்
- முத்துக்குமரனின் முன்னைக்கும்எந்தை தந்தை ஈசனுக்கும்
- சொத்தான கமண்டலக் காவிரியின் வித்தகனுனக்கும் மங்களம்
- பிள்ளையார்பட்டியின் கற்பகமே பர்த்தியின் கற்பகத்தருவே
- பிரசாந்தி கணபதியுனக்குப் புனிதத் தபோவனத்தருவின்
- கற்பக அருளே, ஸ்ரீ சத்திய சாயி நாதனுனக்கு மங்களம்
- பிரசாந்திப் பிரகாந்தி சுப்பிரமணிய சுவாமி
- தனயனுனக்கு மங்களம்
- குடைப் பிள்ளையாராய்க் கருணைக் கொடையருளும்
- ஸ்ரீசத்ய சாயிநாதனே உனக்கு மங்களம்
- ஸ்ரீ சத்திய சாயி நாத, சாயி ராம, சாயி கிருஷ்ண, சாயி சிவசக்தி
- ஸ்வரூப சாயிகணேசனுனக்கு மங்களம் மங்களமே சரணம்.