‘நான்’ களையச் சொல்வாய்

  • சுவாமி நின் சரணங்கள் இருளை அகற்றிப்
  • பிரகாசத்தை அளிக்கிறது
  • நின் திருவடித் தாமரைகள் சரணாகதி நல்கி
  • மனச்சாந்தி தருகிறது
  • நின் பாத கமலம் பணிந்தவர்க்குப்
  • பாவ விமோசனம் சித்திக்கிறது
  • நின் பாதாரவிந்தம் ஆதாரச்சொந்தமாய் பாந்தமாய்
  • என்றும் துணை நின்று காக்கிறது
  • கூப்பிட்ட குரலுக்குக் கஜேந்திர மோட்சமாய்
  • வந்து அபயக்கரம் தருகின்றாய்
  • ‘நான் இருக்கப் பயமேன்’ என்று
  • அபயஹஸ்தம் அளிகின்றாய்
  • “நான்” களைய நல்அருள்மொழி பகர்கின்றாய்
  • நானாவிதப் பரிமளப் புஷ்பங்கள் மணம் வீசுவது போல்
  • பன்மதப் பக்தருக்கும் நற்பவி நற்கதியருள்கின்றாய்
  • சிவம் பிரம்மா விஷ்ணுவும் ராம கிருஷ்ணதத் தாத்ரேயரும்
  • அலை, கலை, மலை, மகள்களும் மூலமும் முடிவும்
  • நீயாய் அவரவர் தெய்வமாய்க்காட்சி தந்துகடாட்சித்துப்
  • பிறவிக் கடலைக் கடக்கக் கடைத்தேற்றுகின்றாய் சுவாமி
  • தேவர்களணி வகுத்துத்தொழுதிடும் சாயிதேவனுன்
  • வியாபகம் வையம் முழுதும் பரவட்டும்
  • பயிர்கள் செழித்து வளரட்டும்
  • அனைத்துயிர்களும் நிலைத்த அன்பில் மலரட்டும்
  • ஆன்மீகச் சனாதன தர்மம் தழைக்கட்டும்
  • கல்வி கேள்வி பண்பாடு புனித கலாச்சாரத்தில்
  • பாரதம் சிறக்கட்டும்
  • உன் அன்பு மதம் அதிசயம் புரியட்டும்
  • உன் அற்புதவினோத லீலைகள் தொடரட்டும்
  • நின்சரணங்கள் நாமஸ்மரணைகள் சாஸ்வத
  • சாந்நித்ய மளிக்கும் தருணங்களாகட்டும்
  • உனது தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷணத்தில்
  • நெக்குருகித் தொழுகின்றோம் சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0