நல்லன மட்டும்
- பலவண்ணப்பூக்கள், பறவைகள்போல்-உன்
- பன்னாட்டுப் பன்முகப் பக்தர்கள் கூட்டம்
- பலப்பல எண்ணம் வண்ணங்களுடனுன்
- சன்னிதி வலம் வரும், குலம் காக்கும்
- சில உடன் ஆகும். சில கால தாமதமாகுமுன்சங்கல்பத்தில்
- நல்லன மட்டுமுன் சாந்நித்யத்தில் நற்பவி ஆகும், நலமாய்ச்
- சங்கடங்கள் தீரும், தீர்க்கும்.
- சாபங்கள் கோபதாபங்கள் மறையும்
- தீவினைகளகலும் திருப்புமுனையுணரும்
- மும்மலங்கள் போகும், முக்கண்ணன் உன்னருள்தான்
- பெருகும், நிம்மதி வளரும், உன் சந்நிதி வணங்கும்,
- உனது சாந்நித்யம் பெருகும்
- இம்மை மறுமை இகபர வாழ்வில்
- இடர்துயர் நீங்கி இனியவை மல்கும்
- இனிய அன்பு சாயினருட்கருணை அபயஹஸ்தமளிக்கும்
- உன் திருவடி மலர்களுக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்