பால் அபிஷேகம்
- பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால்
- பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன்
- நீ நற்பவி நல்கிடுவாய்
- சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை
- அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன்
- கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும்
- சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில் சங்கமிக்கும்
- அகிம்சைப் பாதையில் உலகில் சமாதானம் மலரும்
- சாத்வீகம் ஒளிரும்
- அரிஅரனுனைத் தொழுது அகிலமுன்னன்பருளில் திளைக்கும்
- பிரசாந்திக் கருவறைத் தெய்வமே ஸ்ரீ சத்திய சாயீசா
- பிரவாகமாயுன் அருட்கருணை அன்பு வெள்ளம்
- அனைத்து உயிர்களுக்கும் கிட்டி பரப்பிரம்மம்
- உன் மலரடி தொழுதுய்ய வேண்டும். சரணம் சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்