பிரவாஹம்
- நிலவு பால்போன்ற ஒளியைத்தான் சிந்தும்
- ஆனால் சுவாமி உன் கடைக்கண் எனும் பால் நிலவு
- மூவுலகிற்கும் பேறுகளை வாரி வாரி வழங்கும்
- கரிய ஒளி வீசும் நிலவு போன்று மிக உயரமான
- கங்கோத்திரியினின்றும் தங்குதடையின்றிப் பிரவஹிக்கும்
- கங்கையைப்போலுன் வாக்குப் பிரவாஹம்
- பார்க்க, கேட்க, ரசிக்க, வியக்க, வைத்திடும் சுவாமி
- உனது பாடல்களோ செவி வழி அணுவிற்குள்
- இசைந்து விடும், இயற்கையும் அசைந் துருகிவிடும்
- உன் கருணைக் கண்களின் காந்திதான்
- சாந்தியை யளித்திடுமே – உன்
- ஸ்பரிச தரிசனமும் இப்பிறவிப் பயனை நினைவுறுத்தும்
- அழகு தரிசனமோ உன்னன்புக்
- கரிசனத்தைக் கருணையுடன் உணரவைக்கும்
- பர்த்தியம் பதியின் கருவறைத் தெய்வமே என்றுந்தொடர்ந்து,
- தொடர்ந்து, அருள்புரிய வரவேண்டும் சுவாமி
- ஸ்ரீ சத்திய சாயி நாத தெய்வமே சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்