பிரசாந்திப் பொய்கையில்
- புனிதப் பிரசாந்திப் பொய்கையிலன்றலர்ப் பங்கயமாய்
- மலர் முறுவல் பூத்துவரு முகமொன்று
- செவ்வங்கி தனில் மென் நடை நடந்து வந்து செவ்விளநீரின்
- குளுமையாய் அருள் உரையாற்று முகம் நன்று
- அன்பு மதமுருவாக்கி அனைத்துலக பக்தர் களையும்
- கீதைப் பாதைதனில் வழி நடத்தும் சத்திய முகமின்று
- பற்பல சேவைகளாற்றி ஆத்ம திருப்தியளித்திடச்
- சங்கல்பமருளிய நம் சுவாமியினருட்
- கொடையே சத்தியமான சாத்தியம்
- பக்த உயிர்கள் சாயிஅன்னையின் பக்தி ஞானம்
- பெறும் பக்தக் கன்றுகள்
- சிவம் நின்றாடும் மன்றில்கள்
- குமரன் கோலோச்சும் குன்றுகள்
- நற்பவியருளும் நர்த்தன நடராசன் சபைகள்
- ஆதிசக்தி தவமியற்றும் கடல் மலைகளென
- இயற்கையும் இறையேவுன் கொடையே
- அனைத்து முந்தனுருவே சுவாமி
- ஆதார சக்தி நீயாய னைத்துயிர்களையும்
- காத்து அருள்வாயே !
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: