புத்தம் புதுப் புதினம்

  • அவரவர்க்குப் பிடித்த புத்தம் புதுப் புதினம்
  • படிக்க ஆனந்தம் கிட்டும்
  • எல்லோருக்கும் பிடித்த உன் மந்தகாச வதனமதைத்
  • தரிசிக்க ஆத்மார்த்தம் உயிரில் எட்டும்
  • உண்டவருக்கு உன் நாராயண சேவைப்
  • பிரசாதம் அமுதத்தை ஒக்கும்
  • வானவர்களுக்கும் பசியாற்றி
  • ஆகர்ஷணத்தையே அளிக்கும்
  • தேவர், ரிஷிபுங்கவர், முனிவர்களுக்கு
  • வாத்சல்யத்தையும் நல்கும்
  • அன்னமும் நீ, அன்னபூரணியும் நீ
  • அஷ்டலக்ஷ்மியும் நீ யன்றோ
  • ஆதிகடவூர் அபிராமி அன்னையும், ஆயிரமாயிரம்
  • அன்னையினன்பும், உன்கருணையன்றோ
  • பண்பாடித்துதித்திடவும் உன்னன்பு
  • அருளுக்கு எல்லையில்லை
  • விண்முட்டும் வரையிலுமுன் லீலா வினோதங்களுக்கு
  • எண்ணிக்கையில்லை
  • உன்சேவையாற்றிட்ட பக்தர்களுக்கு வாழ்வியலில்
  • ஏதும் பஞ்சமில்லை
  • கல்லில் தேரைக்கும் கருவறைக் குழவிக்கும்
  • உன்னருள் தவிர வேறு தஞ்சமில்லை
  • உனையேற்றிட்ட அன்பர் நெஞ்சில் வஞ்சமில்லை
  • துஞ்சலிலும் துயரிலும்கூடத் துணையிருக்கும் தெய்வம்
  • நீதானென்றுனை நம்பித்தொழுவோர்க்குத்
  • தும்பிக்கையோனாயும் வந்தே வினைகளைவாய்
  • பிரசாந்தி சாயிகணேசனாய்
  • வியாழனிலும் வியாழனாய் வந்து நற்பவியாய்
  • விடியல் தர வேண்டும் ஸ்ரீ சத்ய சாயிநாதா சரணாகதி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0