சாயி முகுந்தன்

  • கதம்பவனப் பூஞ்சோலையில் சாயிகிருஷ்ணா உன்
  • காருண்ய மலர்கள் மலர்ந்திடுமே மாயக் கிருஷ்ணா
  • ஆரண்யமென்ன அயோத்தி தானென்ன எங்கும் உன்
  • கருணை மழை பொழியுமே ஆனந்த வெள்ளமாய் வடியுமே
  • முகுந்தனுன் வேணுகானமதில் உயிர்கள் அனைத்தும்
  • மயங்குமே தகுந்த உன் குழலோசை மனம் புகுந்து
  • லயிக்குமே
  • மிகுந்த உன்னன்புக்கருணையும் உலகெல்லாம் வியக்குமே
  • பர்த்திப் பார்த்தனுன் பக்திப் பிரவாகம்தான் பரவுமே
  • குடைப்பிள்ளை யாரின் கொடைதானுன்
  • பக்தப் பிள்ளைகளைத் தொடருமே
  • பிரசாந்திச் சாயி கணேஷின் நேசம்தான் பெருகுமே
  • துதித்தவருக் கெல்லாமும் பலனைப்பெருக்குமே
  • சாயி சுப்பிரமணிய சுவாமியுனது சுப்ரபாதம் சுகமாய்
  • வளிமண் டலத்தில் பரவுமே
  • ஸ்ரீராம அவதார மகிமையுமுன் சாயிராம அவதாரத்தின்
  • பவதாரத்தில் விரியுமே
  • கோகுலத்து கோப கோபியர்கள்தானின்று
  • கோகுல ஆநிரைகளாய்
  • மதுரா பிருந்தாவனச் சகாக்களே இன்று உன்
  • பக்தர்களாயமுனையின் நீர்த்துளிகளாயு னது
  • அத்தியந்த அன்பர்களின் பெருவெள்ளமாய்
  • இரு தாய்கள் வளர்த்திட்ட ஒருமகனாமுனையின்று
  • பர்த்தி யவதாரமாய்த் தெரியும் எண்ணற்ற பேர்களுக்கு
  • உன் காந்த அபயஹஸ்தம்மறவாதுனைத் தரிசித்த பேர்களுக்கும்
  • வேறு நினைவேதும் தெரியாதுன் சம்பாஷனத்தின் ஆகர்ஷனம்
  • அள்ள அள்ளக் குறையாது சுவாமி உன் அன்பின் ஆனத்தத்வம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0