சத்ய சாயிமா

  • அருள்தரும் அன்னையாம் ஸ்ரீ சத்யசாயி மா
  • உலகிலனைத்தும், பேறு பதினாறும்,
  • கலைகளறுபத்து நான்கிலும் நீதானம்மா
  • இருள் நீக்கி இன்பம் தந்து இன்னல் களைவாய் நீ
  • மருள் போக்கித்துயர் தீர்த்துக் கன்னல் சுவைதருவாய்
  • உன் சுருள் குழலும் சூட்சுமமே உன் நயனங்களின்
  • நோக்கும் தீட்சண்யமே, தீட்சை மயமே
  • உன் சூட்டிய மலர்களிலும் தானுன் தாட்சண்யமே
  • காட்டிய உன் அபயஹஸ்தம் கூட்டுமே
  • தாட்சாயணியுனது உருவமே
  • அன்னம் பாலிக்கும் அன்னபூரணித்தாயாய்க் காசி
  • விசாலாட்சி, மதுரையில் மீனாட்சி, காஞ்சி காமாட்சியாய்,
  • முத்தேவியராய், அலை, கலை, மலை, மகள்களாய்ச்
  • சிவசக்தி ஸ்வரூபிணியாய்ப் பர்த்தீஸ்வரியாய்ப்
  • பரமேஸ்வரியாய்ப் பாரெல்லா மனைத் துயிர்களுக்கும்
  • அருள் புரியவே ஸ்ரீ சத்ய சாயீஸ்வரித்தாயே நீ
  • வந்து அருள் புரிவாயே சரணம் சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0